"உச்சத்தில் தலித்கள் மீதான பாஜகவின் அட்டூழியம்" - பரபரப்பு ட்வீட்

x

தலித் மற்றும் பழங்குடியினருக்கு வன்கொடுமைகளை இழைத்த பா.ஜ.க. அரசுக்கு, மக்கள் பாடம் புகட்டுவார்கள் என, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதி​வில், மத்திய பிரதேசத்தில் தலித்துகள் மீதான பா.ஜ.க அரசின் அட்டூழியங்கள் உச்சத்தில் இருப்பதாக குறிப்பிட்டார். சாகர் மாவட்டத்தில் 10 தலித் குடும்பங்களின் வீடுகள் இடிக்கப்பட்டதுடன், பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளும் இடிக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். தலித்துகள், பழங்குடியினர் மற்றும் ஏழைகள் மீது வன்கொடுமைகளை இழைத்த பா.ஜ.க அரசுக்கு மத்தியப் பிரதேச மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்