எம்எல்ஏக்களுடன் பாஜக பேரம் பேச முயற்சி? தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் வெளியிட்ட வீடியோ

x

எம்எல்ஏக்களுடன் பாஜக பேரம் பேச முயற்சி? தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் வெளியிட்ட வீடியோ - தெலங்கானா அரசியலில் பெரும் பரபரப்பு

தெலங்கானாவின் டிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்களை பாஜகவினர் விலைக்கு வாங்க முயன்றதாக கூறிய அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், அது குறித்த வீடியோக்களை வெளியிட்டார்.

தெலங்கானாவில் டி.ஆர்.எஸ் எம்எல்ஏக்களான ரேகா காந்த ராவ், குவ்வாலா பாலராஜு, பீரம் ஹர்ஷ்வர்தன் ரெட்டி, பைலட் ரோஹித் ரெட்டி ஆகிய 4 பேருடன் பாஜகவினர் பேரம் பேச முயன்றதாக கூறப்பட்டது. அந்த எம்எல்ஏக்களுக்கு பணம் வழங்குவதன் மூலம், அவர்களை கட்சி மாறச் செய்து டிஆர்எஸ் அரசை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டுகளை பாஜக மறுத்துள்ள நிலையில், ஆதாரங்களாக சில வீடியோக்களை முதல்வர் சந்திரசேகர ராவ் வெளியிட்டுள்ளார். இந்த விவகாரம் தெலங்கானா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்