"ஈரோடு தேர்தல் பணிகளை கவனிக்க பாஜக சார்பில் மாநில குழு" - பாஜக தலைவர் அண்ணாமலை
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பணிகளை முழுமையாக கவனிக்க, பாஜக சார்பில் மாநில குழு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக பாஜக தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் பணிகளை முழுமையாக கவனிக்கவும், ஒருங்கிணைக்கவும் மாநில அளவில் குழு அமைக்கப்படுவதாக கூறியுள்ளார். அந்த குழுவில், V.C.வேதானந்தம், பாஜக எம்எல்ஏ சரஸ்வதி, N.P.பழனிசாமி உள்ளிட்ட 14 பேர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளது
Next Story