மதுரையில் காணாமல் போன பாஜக பிரமுகர்... 4 நாட்களுக்கு பின் காத்திருந்த அதிர்ச்சி
வாடிப்பட்டியை அடுத்த தாதம்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவர் சரவணபாரதி. இவர் அப்பகுதியின் பாஜக செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார். இவர் கடந்த 4 நாட்களாக வீட்டிற்கு வராத நிலையில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தார். இந்நிலையில் வாடிப்பட்டி பாலன் நகர் பகுதியில் உள்ள கிணற்றில் அழுகிய நிலையில் ஒரு சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. உடலை மீட்டு விசாரித்ததில், அது காணாமல் போன சரவணபாரதி என்பது உறுதியானது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story