ராமர் சிலை மீது கால் வைத்ததால் பகிரங்க மன்னிப்பு கேட்ட கர்நாடக பாஜக MLA - தீயாய் பரவும் வீடியோ
- கர்நாடகாவின் பீதர் மாவட்டத்திலுள்ள பசவ கல்யான் சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏவான பாஜகவை சேர்ந்த ஷரனு சால்கர், ராமநவமி தினத்தையொட்டி பசவகலியானில் உள்ள ராமர் சிலைக்கு மாலை அணிவித்து வழிபட்டார்.
- சுமார் 15 அடி உயரமுள்ள ராமர் சிலைக்கு மாலை அணிவித்து வழிபட முறையாக ஏற்பாடுகளை அவர் செய்யவில்லை.
- இந்நிலையில், ராமர் சிலையின் மீதே காலை வைத்து ஏறி, ராமர்சிலை தொடையில் நின்றவாறு சிலைக்கு மாலை அணிவித்தார்.
- இதுதான் இப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
- கடவுள் சிலை மிதித்து மேலே ஏறி இருக்கும் எம்எல்ஏவுக்கு எதிராக பொதுமக்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
- சமூக வலைத்தளத்தில் வீடியோ பரவியதையடுத்து, பாஜக எம்எல்ஏ ஷரனு சால்கர், தொண்டர்களின் வற்புறுத்தலின் பேரில், சிலை மீது ஏறி நின்றதாகவும், யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
Next Story