"என் மரணத்துக்கு காரணம் பாஜக எம்எல்ஏ..." கடிதம் எழுதிவிட்டு தொழிலதிபர் தற்கொலை... கர்நாடகாவில் பரபரப்பு

x

பெங்களூருவை சேர்ந்த பிரதீப், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பின் ராம் நகர் மாவட்டத்தில் இருந்து காரில் வீடு திரும்பியுள்ளார்.

வரும் வழியில் சாலையின் ஓரம் காரை நிறுத்தி, துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலைக்கு முன்பு பிரதீப் எழுதிய கடிதத்தை, காரில் இருந்து போலீசார் மீட்டனர்.

அதில், ரிசார்ட் ஒன்றை தொடங்குவதற்காக ரமேஷ் ரெட்டி, கோபி, ஜெயராம், ராகவ் பட் மற்றும் சோமைய்யா ஆகியோருடன் பார்ட்னர்ஷிப் அடிப்படையில், சுமார் ஒன்றரை கோடி ரூபாய் முதலீடு செய்ததாகவும், ஆனால் பாஜக எம்எல்ஏ அரவிந்த் லிங்பாவளியின் செல்வாக்கை பயன்படுத்தி, தன்னை மோசடி செய்துவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனது இறப்பிற்கு பிறகாவது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்