சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்த பாஜக எம்எல்ஏ... வைரலான வீடியோ.. - உடனடியாக பறந்த நோட்டீஸ்
- திரிபுரா மாநில சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் ஆபாச படம் பார்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- திரிபுராவில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
- இதையடுத்து சட்டப்பைரவை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.
- இந்நிலையில், பாக்பாசா தொகுதி பாஜக எம்எல்ஏ ஜதப் லால் நாத், சட்டப்பேரவையில் அமர்ந்து கொண்டே தனது செல்போனில் ஆபாச படம் பார்த்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், விரைவில் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும் என பாஜக மாநிலத் தலைவர் ராஜிப் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.
Next Story