பிரபல ரவுடியாக வலம் வந்த பாஜக பிரமுகரை சினிமா பாணியில் காரில் சேசிங் செய்து வெட்டி சாய்த்த கொடூரம் -சென்னையில் பயங்கரம்

x

ஸ்ரீபெரும்புதூரில் காரில் வந்த பாஜக மாநில பொறுப்பாளரை நாட்டு வெடி குண்டு வீசியும், ஒட ஒட விரட்டி வெட்டி கொலை செய்த பதைபதைக்கும் சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.....

ஸ்ரீபெரும்புதுரை சேர்ந்தவர் பி பி ஜி சங்கர். பிரபல ரவுடியான இவர் மீது 15 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. வளர்பிறை ஊராட்சி மன்ற தலைவராகவும், பாஜகவில் எஸ்.சி எஸ்.டி மாநில பொருளாளராகவும் இருந்து வந்தார். சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, காரில் நசரத்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென இருசக்கர வாகனம் மற்றும் கார் மூலமாக துரத்திய கும்பல் அவரின் கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளது.

இதில் நிலை குலைந்த பி பி ஜி சங்கர், காரை விட்டு இறங்கி தப்பிக்க முயன்றபோது, மறைந்திருந்த மற்றொரு கும்பல் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்தில உயிரிழந்தார். தகவலின் பேரில் வந்த போலீசார், சங்கரின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

போலீசாரின் முதற்கட்ட விசாரனையில், சங்கரின் நண்பரும், ஸ்ரீபெரும்புதுரில் பிரபல ரவுடியாக வலம் வந்த பி.பி.ஜி குமரன், கடந்த 2012 ம் ஆண்டு இதே போன்றுவெடி குண்டு வீசி கொலை செய்யப்பட்டர். அதன் பின்பு கொலை, கட்டப்பஞ்சாயத்து, என சங்கர், பல செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதனால் முன்விரோதம் காரணமாக, சங்கருக்கு ஏராளமான எதிரிகள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இந்த கொலை வழக்கு தொடர்பாக, எழும்பூர் நீதிமன்றத்தில் உதயகுமார், சாந்தகுமார் ஜெகன், குணா, சரத்குமார், ஆனந்த், சாந்தகுமார், சஞ்சு, தினேஷ் ஆகிய 9 பேர் சரணடைந்துள்ளனர். இந்த கும்பலுக்கும், சங்கருக்கும் தொழிற்சாலை கழிவுகளை எடுப்பதில் தொழில் போட்டி நிலவி வந்துள்ளது. இதன் காரணமாகவே கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சரணடைந்த 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை அடுத்த மாதம் 5ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்