கூலி தொழிலாளி மீது தாக்குதல் நடத்திய பாஜக பிரமுகர் - தீயாய் பரவும் காட்சிகள்

x

கூலி தொழிலாளி மீது தாக்குதல் நடத்திய பாஜக பிரமுகர் - தீயாய் பரவும் காட்சிகள்

நிதி நிறுவனத்தில் வாங்கிய தொகையை செலுத்திய பிறகும் அதிக வட்டி கேட்டு கூலி தொழிலாளி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குமாரபாளையம் அருகே அரங்கேறியுள்ளது.நாமக்கல் மாவட்டம் கண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த விசைத்தறி கூலி தொழிலாளி ராம்குமார், பள்ளிபாளையம் பெருமாள் மலைப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில் 20 ஆயிரம் ரூபாய் வட்டிக்கு பணம் பெற்றுள்ளார். பெற்ற பணத்திற்கான வட்டி மற்றும் அசல் ஆகியவற்றை முழுமையாக செலுத்திய ராம்குமார், தான் கொடுத்த ஆவணங்களை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் நிதி நிறுவனத்தின் உரிமையாளரான பாஜக பிரமுகர் நாச்சிமுத்து 20 ஆயிரம் ரூபாயை மீண்டும் செலுத்தினால் மட்டுமே ஆவணங்களை திரும்ப தரமுடியும் என கூறியதாக தெரிகிறது.

அதBJP leader assaults laborer - footage goes viralற்கு ராம்குமார் எதிர்ப்பு தெரிவித்து கேள்வி கேட்டதால், ஆத்திரம் அடைந்த நாச்சிமுத்து அடியாட்களை ஏவி ராம்குமார் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் காயம் அடைந்த ராம்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில்பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்