பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு... அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு... அமைச்சர் சேகர் பாபு விளக்கம்
x


சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி பல்லாக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு வெள்ளிப் பல்லக்கை பெற்றுக் கொண்டார்.

அறநிலைத்துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பின், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு, அறநிலையத்துறை இல்லையென்றால் கோவில்களை யார் பராமரிப்பது என கேள்வி எழுப்பினார்.

மேலும் அறநிலையத்துறை வாகனத்தை சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தியது இல்லை எனவும் அமைச்சர் விளக்கமளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்