நாட்டு வெடிகுண்டு வீசி பாஜக நிர்வாகி கொலை - அண்ணாமலை கொடுத்த வார்னிங்..!
சென்னை, பூந்தமல்லியில் பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து முகநூலில் பதிவிட்ட அண்ணாமலை, சமூக விரோதிகளால் நாட்டு வெடிகுண்டு வீசி சங்கர் கொலை செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தாக தெரிவித்தார். உடனடியாக, குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநிலம் முழுவதும் தமிழக பாஜக போராட்டம் நடத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Next Story