பணம் மோசடி செய்த பாஜக நிர்வாகி..!கண்டுகொள்ளாத நயினார் நாகேந்திரன் காவல் ஆணையர் நாடிய மாற்றுத்திறனாளி
நெல்லை வடக்கு மாவட்ட பாஜக பொது செயலாராக உள்ள டி.வி சுரேஷ் என்பவரது டைல்ஸ் கடையில் பாளையங்கோட்டையை சேர்ந்த சண்முகம் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். அவருக்கு கடந்த 8 மாதங்களாக சம்பளம் தராமல் டிவி சுரேஷ் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. மேலும் சண்முகத்திடம் 13 சவரன் நகையை வாங்கி வங்கியில் அடமானம் வைத்து 25 ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்து விட்டு மோசடி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி பாதிக்கப்பட்ட சண்முகம் தனது மனைவியுடன் சென்று நெல்லை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தார். அதில் பண மோசடி செய்ததாக பாஜக நிர்வாகி டிவி சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story