"வன்முறை மூலம் மக்களை பயமுறுத்தும் பா.ஜ.க., சி.பி.எம்" - ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு

பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வன்முறை மூலம் மக்களை பயமுறுத்துவதாக காங்கிரஸ் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.
x

பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வன்முறை மூலம் மக்களை பயமுறுத்துவதாக காங்கிரஸ் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.

கேரளா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, மலப்புரத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். முதல்வர் பினராயி விஜயனிடம் அமலாக்கத்துறை விசாரிக்காத‌து ஏன் என கேள்வி எழுப்பிய அவர், அதற்கு காரணம், பாஜகவுக்கும் மார்க்சிஸ்க் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளது என்றார். தனது அலுவலகத்தை சிபிஎம் கட்சி எத்தனை முறை சேதப்படுத்தினாலும் பிரச்சனை இல்லை என்ற ராகுல் காந்தி, பா.ஜ.கவும் சிபிஎம்மும் வன்முறை மூலம் மக்களை பயமுறுத்தலாம் என்று நினைப்பதாக குற்றம் சாட்டினார். அமலாக்கத்துறை அலுவலகத்தில் உட்கார வைப்பதன் மூலம் மத்திய அரசும், அலுவலகத்தை தாக்குவதன் மூலம் சிபிஎம்மும் தனது நடவடிக்கையை மாற்றிவிடலாம் என நம்புவதாக தெரிவித்த ராகுல் காந்தி, தனது நடத்தையை எதிரிகளால் வடிவமைக்க முடியாது என்றார்.


Next Story

மேலும் செய்திகள்