அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற பாஜக | பாஜக -போலீஸ் இடையே கடும் தள்ளுமுள்ளு

x

விருதுநகரில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வீட்டை முற்றுகையிட முயன்ற பாஜகவினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பாலவனநத்தம் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில் இலவச ஆடு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் போது ஒரு பெண், தனது தாய்க்கு முதியோர் உதவித் தொகை கேட்டு மனு அளித்தார். அப்போது அந்த மனுவினை வைத்து அந்தப் பெண்மணி தலையில் அமைச்சர் அடித்ததாக சமூகவலை தளங்களில் வீடியோ வைரலாக பரவியது. இதைக்கண்டித்து பாஜக அமைச்சர் வீட்டை முற்றுகையிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்