2 ஆண்டுகளில் இல்லாத அளவு பிட்காயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
2 ஆண்டுகளில் இல்லாத அளவு பிட்காயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
கிரிப்டோ கரன்சியான பிட்காயின் மதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கிரிப்டோகரன்சி எனப்படும் மெய்நிகர் நாணயத்தில் முதலீடு செய்ய ஏராளமானோர் ஆர்வம் காட்டியதால், பிட்காயின் மதிப்பு கடுமையாக உயர்ந்தது. இதனால் கடந்த ஆண்டு பிட்காயின் மதிப்பு 70 ஆயிரம் டாலர் வரை உயர்ந்தது. இந்நிலையில், தற்போது பிட்காயின் மதிப்பு 18 ஆயிரம் டாலராக குறைந்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் உள்ள பிட்காயின் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
Next Story