மின்னல் வேகத்தில் மோதிய பைக்குகள்... உயிர் பலி வாங்கிய அதிவேக 'பைக் ரேஸ்' - வெளியான நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்

x

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே பைக் ரேசில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் சிலர் பைக் ரேசில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே குருபரப்பள்ளி அருகே வந்தபோது இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்திற்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட சபரி, ஹர்ஷா ஆகிய இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், தவிப்கான் என்பவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்