கோவையில் வடமாநிலத் தொழிலாளர்களிடம் பீகார் குழுவினர் விழிப்புணர்வு
கோவையில் போலி வீடியோக்கள் குறித்து வடமாநிலத் தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்று பீகார் குழுவினர் தெரிவித்தனர்.தமிழகத்தில் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வீடியோக்கள் பரவியதை அடுத்து, இதுகுறித்து ஆய்வு செய்வதற்கு பீகாரில் இருந்து அரசு தரப்பில் பீகார் மாநில ஊரக வளர்ச்சி உள்ளாட்சி செயலர் பாலமுருகன் தலைமையிலான ஆய்வுக் குழுவினர் சென்னை வந்தனர். திருப்பூரில் ஆய்வு மேற்கொண்ட அவர்கள், கோவையில் பீகார் மாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் இடம், சுகாதாரம், விடுதியில் நாள்தோறும் வழங்கப்படும் உணவு, சம்பளம் ஆகியவை தொடர்பாக கேட்டறிந்தனர். பணியிடத்தில் பாதுகாப்பான சூழல் உள்ளதா என்றும் அவர்கள் கேட்டறிந்தனர். பின்னர், சமூக வலைத்தளங்களில் பரவும் போலி வீடியோக்கள் குறித்து அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Next Story