பஞ்சாயத்தார் முன்பே.. | தங்கையை மடியில் வைத்து கதற கதற பைக்கில் தூக்கி சென்ற அண்ணன்கள் | காரணம் இது தான்..?

x

பீகார் அராரியா ஷயாம் நகர் கிராமத்தை சேர்ந்தவர் ரூபா குமாரி. இவர் அப்பகுதியை சேர்ந்த சோட்டு குமாரை பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த மாதம் 28ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறிய காதலர்கள், கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இதையறிந்த சோட்டு குமார் குடும்பத்தார், இருவரையும் தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தனர். எனினும் பெண் வீட்டார் எதிர்ப்பு காரணமாக, பிரச்னையை சுமுகமாக தீர்க்க ஊர் பஞ்சாயத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பஞ்சாயத்து நடந்து கொண்டிருந்தபோதே, சோட்டு குமாரின் தந்தையை தாக்கிய பெண்ணின் சகோதரர்கள், ரூபா குமாரியை தங்களது இருசக்கர வாகனத்தில் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். இதையடுத்து புகாரின்பேரில் வீட்டிற்குச் சென்று பெண்ணை மீட்ட போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்