பீகார் அமைச்சர் கார்த்திகேய சிங் ராஜினாமா
பீகார் அமைச்சர் கார்த்திகேய சிங் ராஜினாமா
பீகார் அமைச்சர் கார்த்திகேய சிங்கின் இலாகா மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு நடந்த கடத்தல் வழக்கில், கார்த்திகேய சிங் டானாபூர் நீதிமன்றத்தில் சரண் அடையாமல், பாட்னாவில் அமைச்சராக பதவியேற்றார். இது பெரும் சர்ச்சையை கிளப்பி நிலையில், கார்த்திகேய சிங்கை பணி நீக்கம் செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தியது. இந்நிலையில், கார்த்திகேய சிங் சட்ட துறை அமைச்சர் இலாகவிலிருந்து, கரும்பு தொழில்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
Next Story