பீகார் துணை முதல்வர் இல்லத்தில் அமலாக்கத்துறை திடீர் சோதனை | Bihar

x

ரயில்வே துறை வேலை முறைகேடு தொடர்பான வழக்கில், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவின் டெல்லி இல்லம் உள்ளிட்ட 12 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

2004-2009 காலகட்டத்தில் ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ், நிலத்தை லஞ்சமாக பெற்றுக்கொண்டு வேலை அளித்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அதே விவகாரத்தை சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அமலாக்கத்துறையும் விசாரித்து வருகிறது. இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக, டெல்லி மற்றும் பீகாரில்12 இடங்களில், அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. குறிப்பாக லாலு பிரசாத்தின் மகனும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவின் டெல்லி இல்லத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. அண்மையில் இந்த வழக்கு தொடர்பாக லாலு பிரசாத் யாதவிடமும், அவரது மனைவியிடமும் சிபிஐ விசாரணை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்