"Open AI-யால் பெரும் அபாயம்"... உருவாக்கியவரையே அலற வைத்துள்ள ChatGPT - ஆபத்து என்ன..?

x

உலகமே ஆட்டோமேஷனில் மூழ்கும் நிலை உருவாகியுள்ள இந்த நேரத்தில், சாட் ஜி.பி.டி. (Chat GPT) பயன்பாட்டிற்கு வந்து பேசுபொருளாக மாறியுள்ளது.

சாட்போட் (chatbot) மூலம் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ள சாட்ஜிபிடியின் தாய் நிறுவனமான Open A.I. யின் சி.இ.ஓ. சாம் ஆல்ட்மேன், இதன் மூலம் பலரின் வேலை பறிபோகும் அபாயம் உள்ளதாக அச்சம் தெரிவிக்கிறார்.

ஏ.ஐ. சாட்போட் எதிர்காலத்தில் மனித வேலைகளை திறம்பட மேற்கொள்ளும் திறன் கொண்டுள்ளதாக தெரிவித்த அவர், இதில் கவனமுடன் செயல்படுவதாக கூறியுள்ளார்.

ஏ.ஐ. மூலம் தவறான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுத்துவருவதாக கூறிய சாம் ஆல்ட்மேன், சைபர் தாக்குதல் அபாயம் உள்ளதாகவும் கவலை தெரிவிக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்