பிரபல நடிகை தற்கொலை விவகாரம்.. நடிகையுடன் ஹோட்டலுக்கு வந்த நபர்? - சிசிடிவி வெளியிட்ட போலீசார்
- பிரபல போஜ்புரி நடிகை தற்கொலை செய்து கொண்ட வழக்கில், நடிகை உயிரிழப்பதற்கு முன்பாக அவருடன் நபர் ஒருவர் ஹோட்டலுக்கு வந்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
- உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில், பிரபல போஜ்புரி நடிகை ஆகான்ஷா துபே ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், நடிகை உயிரிழப்பதற்கு முன்பு அவருடன் சந்தீப் சிங் என்பவர் ஹோட்டலுக்கு வந்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
- அந்நபர் நடிகை அகான்ஷா துபேவுடன் ஹோட்டலில் 17 நிமிடங்கள் இருந்ததும், பின்னர் காரில் புறப்பட்டு செல்வதும் தெரியவந்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story