பார் போற்றும் மகாகவி.. பாரதத் தாயின் செல்லப் பிள்ளை... உணர்ச்சிமிகு கவிதைகளின் சொந்தக்காரர்
சிந்து நதியின் மிசை நிலவினிலே பாடல் - (சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம். சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம். வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால், மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்)
வெள்ளிப் பனிமலை மீதுலவுவோம் - (ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்.
ஆலைகள் வைப்போம் கல்வி சாலைகள் வைப்போம். ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்.
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்)
நிற்பதுவே நடப்பதுவே - (காலமென்றே ஒரு நினைவும், காட்சியென்றே பல நினைவும். கோலமும் பொய்களோ, அங்குக் குணங்களும் பொய்களோ...காண்பதெல்லாம் மறையுமென்றால்
மறைந்ததெல்லாம் காண்பமன்றோ, நானும் ஓர் கனவோ, இந்த ஞாலமும் பொய்தானோ)
கேளடா மானிடாவா இங்கு கீழோர் மேலோர் இல்லை - (பாரதியார் பேசும் காட்சியுடன் )
நின்னை சரண்டைந்தேன்- (துன்பம் இனி இல்லை, சோர்வில்லை, தோற்பில்லை
அன்பு நெறியில் அறன்கள் வளர்த்திட நல்லவை நாட்டிட, தீயவை ஓட்டிட நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை சரணடைந்தேன்)
நல்லதோர் வீணை செய்தே - (நசையரு மனம் கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன்-அசைவறு மதி கேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கெதும் தடையுள்ளதோ-நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எரிவதுண்டோ)