பெர்லின் மக்களின் பிரம்மாண்ட இசை திருவிழா...

x

பெர்லின் மக்களின் பிரம்மாண்ட இசை திருவிழா...

இந்த பக்கம் பார்த்தா வெஸ்டர்ன் டான்சு...அந்த பக்கம் பார்த்தா carnatic music....

முன்னாடி பார்த்த classical கச்சேரி...

பின்னாடி பார்த்தா டப்பாங்குத்து...

அட என்னடா இதுன்னு சுத்தி சுத்தி பார்த்தா, pop-u, rocku, jazzu, hip hop-u உலகத்தோடு ஒட்டுமொத்த இசையும் ஒரே இடத்துல சங்கமிச்சு இருந்தது...

இப்படி, சர்வமும் தாளமயமா ரவுண்டுகட்டி கொண்டாடுற festival- வோட பேரு தான் "carnival for culturals"...

ஜெர்மனி நாட்டோட தலைநகரான பெர்லின்ல 1996-ல இருந்து வர்ஷா வர்ஷம் இந்த பெஸ்டீவல் நடந்துட்டு வருது...

ஆனா, போன மூணு வர்ஷமா லாக்டவுன்ல முடங்கிப்போன பெர்லின் மக்களால இந்த கலாச்சார திருவிழாவ கொண்டாட முடியாம போயிருக்கு...

மக்கள் எல்லாரும் மனசுக்குள்ளயே தேக்கி வைச்சிருந்த கலை தாகத்தை இந்த வர்ஷம் மடைத்திறந்து ஆடி பாட உற்சாகமாக கொண்டாடி இருக்காங்க...

பெர்லின்ல இருக்கக்கூடிய அனைத்து நாட்டு கலை சங்கங்களும் இந்த திருவிழாவுல கலந்துக்கிட்டு அவங்களோட கலை, பண்பாடு மற்றும் அரசியல் முதற்கொண்டு பல விஷயங்கள ரொம்பவே சுதந்திரமா அரங்கேற்றம் பண்றாங்க...

சாதிக்கொரு கோவில், மதத்துகொரு கடவுள், இனத்துகொரு அடையாளத்தோட தனி தனியா கொண்டாட்டங்கள் வெச்சிகிட்டு மதசார்ப்பற்ற நாடுனு பெருமை பேசுற நாம எங்க இருக்கோம்,

உலகத்தையே ஆள நினைச்ச ஹிட்லரோட மண்ல பொறந்துட்டு கலையால இணைஞ்சிருப்போம்னு சொல்ற ஜெர்மன் மக்கள் எங்க இருக்காங்க... ஆயிரம் தான் சொல்லுங்க, இந்த வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன்தான்யா.


Next Story

மேலும் செய்திகள்