6 பக்தர்கள் விதியை முடித்த விதிமீறல்..ஊசலாடும் 17 பக்தர்கள் உயிர் - உறைய வைக்கும் கோர விபத்து

x

கர்நாடக மாநிலம் பெலகாவியில் கோயிலுக்கு பக்தர்களை ஏற்றி சென்ற லோடு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.பெலகாவி மாவட்டத்தின் ஹுலகுந்தா கிராமத்தைச் சேர்ந்த 22 பேர் அதே மாவட்டத்தில் உள்ள சௌதத்தி எல்லம்மா கோயிலுக்கு காரில் புறப்பட்டு சென்றனர். அப்போது, கார் சுஞ்சனூர் கிராமத்தின் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 17 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், முதற்கட்ட விசாரணையில் எட்டு பேர் பயணம் செய்ய வேண்டிய வாகனத்தில், 23 பேர் பயணம் செய்திருப்பதே விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்


Next Story

மேலும் செய்திகள்