வாடகை வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுக்க பணம் இல்லை..இடது கிட்னி விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம்...வைரலாக பரவும் புகைப்படம்

வாடகை வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுக்க பணம் இல்லை..இடது கிட்னி விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம்...வைரலாக பரவும் புகைப்படம்
x

வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுக்க போதிய பணம் இல்லாத காரணத்தால் அதை பூர்த்தி செய்து கொள்ள தனது இடது கிட்னி விற்பனைக்கு உள்ளதாக பெங்களூரு நகரில் ஓட்டப்பட்ட சுவரொட்டி தற்போது இணையங்களில் வைரலாக பரவி வருகிறது.


பெங்களூருவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வாடகைக்கு வீடு தேடியதாகவும், வீட்டு உரிமையாளர் கோரிய செக்யூரிட்டி டெபாசிட் தொகையை செலுத்த பணம் தேவைப்படுவதால், தனது இடது கிட்னி விற்பனைக்கு உள்ளதாக சுவரொட்டி மூலம் விளம்பரம் செய்துள்ளார். அந்த வாசகத்திற்கு கீழே தான் விளையாட்டுக்காக இவ்வாசகத்தை எழுதி இருப்பதாகவும், இந்திரா நகர் பகுதியில் இரண்டு பெட்ரூம் பிளாட் தேடி வருவதாகவும், பெங்களூரில் ஒரு நல்ல வீட்டை வாடகைக்கு பிடிக்க இந்த அளவுக்கு கஷ்டப்பட வேண்டியுள்ளது என்றும் எங்காவது வீடு இருந்தால் கீழே உள்ள க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து தன்னை பற்றி விவரங்களை தெரிந்து கொண்டு தொடர்பு கொள்ளுமாறு அந்த சுவரொட்டியில் குறிப்பிட்டுள்ளார்.


இந்த சுவரொட்டியை ஓட்டியவர் ராம்யக் ஜெயின் என்று கூறப்படுகிறது. குருகான் பகுதியில் இருந்து சமீபத்தில் பெங்களூருக்கு பணியிட மாற்றம் அடைந்த இவர், கடந்த இரண்டு மாதங்களாக இந்திரா நகர் பகுதியில் வாடகைக்கு வீடு தேடி வருவதாகவும், ஆனால் வீடு கிடைக்கவில்லை என்றும், வாடகை மற்றும் அட்வான்ஸ் தொகை பெங்களூர் நகரில் அதிகமாக இருப்பதாகவும் அவர் தனது இணைய பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த சுவரொட்டி குறித்த புகைப்படங்கள் இணையங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்