"பிச்சை போடு.. பிச்சை போடு.."மாணவ மாணவிகள் வினோத போராட்டம் ..திருப்பத்தூரில் பரபரப்பு
திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாதி சான்றிதழ் வழங்க கோரி தமிழ் பழங்குடி குறவன் இன சங்கம் சார்பாக பள்ளி மாணவ மாணவிகள் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு அடுப்பு வைத்து சமைக்க முற்படும் போது போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த மாணவ மாணவிகள் தங்களுடைய பெற்றோருடன் நுழைவு வாயிலில் முட்டி போட்டு அதிகாரிகளை பார்த்து பிச்சை போடு பிச்சை போடு முழக்கங்கள் எழுப்பினர். தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை பட்டினி போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.
Next Story