'குக்கர் கொலை' சூடு அடங்குவதற்குள் இன்னொரு லிவ் இன் டுகெதர் கொலை.. காதலியை துடிக்க துடிக்க கொன்று ரசித்த காதலன்

x

பெங்களூருவில் லிவ் இன் டுகெதரில் இருந்த காதலியை கழுத்தை நெறித்து கொன்ற காதலன், அவரை மின்விசிறியில் கட்டி தொங்கவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

56 வயது முதியவருடன் லிவ் இன் உறவில் இருந்த 36 வயது பெண் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டு, உடல் பாகங்களை குக்கரில் வேக வைத்த அதிர்ச்சி சம்பவம் அடங்குவதற்குள், பெங்களூருவில் மீண்டும் ஒரு கொடூர கொலை அரங்கேறியுள்ளது...

ஹைதராபாத்தை சேர்ந்த இளம் பெண் அகன்ஷா என்பவர் பெங்களூருவில் உள்ள தொழில் நுட்ப நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அங்கு உடன் பணியாற்றிய டெல்லியை சேர்ந்த அர்பித் என்பவருடன் அகன்ஷாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நிறுவனத்தின் மேல் பொறுப்பில் அர்பித் இருந்ததாக கூறப்படும் நிலையில், அர்பித்துக்கு கீழ் அகன்ஷா பணியாற்றியதால் பணி நிமித்தமாக இருவரும் அடிக்கடி சந்தித்துள்ளனர்...

இதனால் ஏற்பட்ட நெருக்கத்தில் இருவருக்கிடையே காதல் மலர்ந்த நிலையில், இருவரும் ஒன்றாக லிவ் இன் உறவில் இருக்கும் அளவுக்கு காதல் சென்றுள்ளது....

இந்நிலையில், திடீரென ஹைதராபாத்தில் உள்ள வேறொரு நிறுவனத்தில் அர்பித்துக்கு வேலை கிடைக்க, அவர் அகன்ஷாவை விட்டு ஹைதராபாத் சென்றிருக்கிறார்...

இதனிடையே, அகன்ஷாவுக்கும் பெங்களூருவிலே வேறோரு நிறுவனத்தில் வேலை கிடைக்க அவரும் பணிமாறிய நிலையில், காதலன் ஹைதராபாத் சென்றதால், தனது தோழியுடனே அறையெடுத்து தங்கியுள்ளார்...

இந்நிலையில், செல்போன் மூலம் இருவரும் காதலை வளர்த்து வந்த நிலையில், அவ்வப்போது அகன்ஷாவை சந்திப்பதற்காக அர்பித் பெங்களூரு வந்து செல்வதாக கூறப்படுகிறது...

இதேபோல் சம்பவத்தன்று காதலியை சந்திக்க அர்பித் வந்த நிலையில், காதலர்களின் சந்திப்புக்காக அகன்ஷாவுடன் தங்கியிருந்த அறைத் தோழி அறையிலிருந்து வெளியே கிளம்பியிருக்கிறார்....

இதன்பின்பு, நீண்ட நேரம் கழித்து அறைக்கு திரும்பிய அகன்ஷாவின் தோழி, பூட்டியிருந்த கதவை வெகுநேரம் தட்டிக் கொண்டே வெளியே நின்றிருக்கிறார்....

ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த அவர், சந்தேகத்துடன் தான் வைத்திருந்த மாற்று சாவியால் அறையை திறந்த போது, அகன்ஷா மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனார்...

தகவலறிந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அகன்ஷாவின் காதலன் அறைக்கு வந்து சென்றதும், அறையினுள் திடீரென தகராறு ஏற்பட்டு இருவரும் சண்டையிட்டதும் தெரியவந்தது....

இதனால், காதலன் சென்ற பின்பு மனவேதனையில் அகன்ஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.. அப்போது அகன்ஷாவின் உடற் பரிசோதனை அறிக்கை, அவர் தலையணையால் முகத்தை அழுத்தியும், கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டதையும் வெளிச்சமிட்டு காட்டியது...

அகன்ஷாவும் அர்பித்தும் தனியே சந்தித்து கொண்ட போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டதும், இதில், அகன்ஷாவை தலையணையால் முகத்தை அழுத்தியும், கழுத்தை நெறித்தும் அர்பித் கொன்றதும் அம்பலமானது. இதன்பின்பு காதலியை மின்விசிறியில் கட்டி தொங்கவிட்டு தூக்கிட்டது போல் நாடகமாடியது தெரியவர, தலைமறைவாக இருந்த காதலனை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அகன்ஷாவும் அர்பித்தும் தனியே சந்தித்து கொண்ட போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டதும், இதில், அகன்ஷாவை தலையணையால் முகத்தை அழுத்தியும், கழுத்தை நெறித்தும் அர்பித் கொன்றது அம்பலமானது. இதன்பின்பு காதலியை மின்விசிறியில் கட்டி தொங்கவிட்டு தூக்கிட்டது போல் நாடகமாடியது தெரியவர, தலைமறைவாக இருந்த காதலனை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்