ஆட்டுக்கறியுடன் மாட்டுக்கறி..? - அதிரடி சோதனையால் அம்பலமான அதிர்ச்சி
ஈரோட்டில் ஆட்டுக்கறியுடன் மட்டுக்கறியும் கலந்து விற்பதாக எழுந்த புகாரை அடுத்து, இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் இறைச்சிகளில் அசைவ பிரியர்கள் குவிந்தனர்.
ஆனால், ஆட்டுக்கறியுடன், மாட்டுக்கறி சேர்த்து விற்பதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, கிருஷ்ணம்பாளையம் சுற்றுவட்டாரத்தில் உள்ள இறைச்சி கடைகள் ஆய்வு செய்த அதிகாரிகள் கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்ததுடன், அவற்றை ஆய்வு எடுத்து சென்றனர்.
தரமற்ற இறைச்சியை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இறைச்சி கடை உரிமையாளர்களை, அதிகாரிகள் எச்சரித்தனர்.
Next Story