சென்னையை உலுக்கிய பெட்ரூம் மர்டர்.. ரத்த கறையுடன் காரில் தொங்கிய கை.. 8 ஆண்டுகளுக்கு பின் எதிர்பாரா திருப்பம்

x

சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்று அருணா கொலை வழக்கு, கொலை செய்த காதலனை கடந்த 8 ஆண்டுகளாக தேடி போலீசார் வருகின்றனர். இதை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.....

சென்னை சூளை பகுதியை சேர்ந்தவர் அருணா. சி.ஏ. படிப்பை முடித்த இவர், இந்திய உணவுகழகத்தில் பணியாற்றி வந்தார். அயானாவரம் நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்த தினேஷ்குமார் என்பவரை அருணா 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

கடந்த 2015ம் ஆண்டு மார்ச் 9 ம் தேதி, அயனாவரம் நம்மாழ்வார்பேட்டை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தினேஷ்குமாரின் வீட்டிற்கு அருணா வந்துள்ளார். அந்த நேரத்தில், தினேஷ்குமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்ததால், இருவரும் தனிமையில் இருந்தபோது, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த தினேஷ், வீட்டில் இருந்த பூந்தொட்டியை கொண்டு தாக்கியதில், அருணா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் சடலத்தை, சேலை மற்றும் படுக்கையில் சுருட்டி எடுத்துக் கொண்டு தனது காரில் ஏற்றியபோது, ரத்தக் கறையுடன் அருணாவின் கை வெளியில் தெரிந்துள்ளது. அதனைக் கண்ட பக்கத்து வீட்டுக்காரர் அதிர்ச்சி அடையவே, தினேஷ் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், தினேஷ் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார்.

கடந்த 8 ஆண்டுகளாக இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வரும் நிலையில், அதிதீவிர குற்ற தடுப்பு பிரிவு போலீசார், வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளனர்.

தலைமறைவான தினேஷ் குறித்த முதற்கட்ட விசாரணையில், அவர் அமெரிக்கா அல்லது கனடா நாட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து, தினெ​ஷூக்கு எதிராக ரெட்கார்னர் நோட்டீஸ் கொடுக்க காவல்துறை முடிவு செய்துள்ள நிலையில், விரைவில் தினேஷ் பிடிபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்