'பீச் ஓரத்தில் ரிசார்ட்'... கடல் பகுதியை விற்று காசு பார்த்த 'திருடர்கள்'... கடல் நீரை நம்பி கானல் நீராக மாறிப்போன சோகம்
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் இசிஆர் சாலையில் உள்ள தேவனேரி பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு அப்பகுதியை சேர்ந்த சிலர் போலியாக ஆவணம் தயாரித்து கடல் பகுதியை விற்றுள்ளனர்.
சுமார் 40 சென்ட் மதிப்புள்ள நிலத்தை வாங்கிய நபரும் ஆழ்துளை கிணறு அமைத்தும், கம்பி வேலி போட்டும் வைத்துள்ளார்.
கடற்பகுதி ஆக்கிரமிப்பில் இருந்தது குறித்து செங்கல்பட்டு ஆட்சியருக்கு தகவல் செல்ல அவர் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டார்.
இதன்பேரில் வருவாய்த்துறையினர், போலீசார் உள்ளிட்டோர் முன்னிலையில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 40 சென்ட் கடல் பகுதி மீட்கப்பட்டது.
குறைந்த விலைக்கு கிடைப்பதால் சொகுசு விடுதி மற்றும் வீடு கட்டி வாழலாம் என கனவில் இருந்தவர்களுக்கு இது கானல் நீராகவே மாறிப்போனது தான் சோகம்.
Next Story