அமித் ஷா பேச்சால் பற்றிய சர்ச்சை.. பாஜகவில் வெடித்த உட்கட்சி பூகம்பம் - சொந்த கட்சி முதல்வருக்கே இந்த நிலையா?
- மோடி மற்றும் எடியூரப்பாவை நம்பி வாக்களித்தால் கர்நாடகாவில் ஊழலற்ற ஆட்சியை பாஜக அமைக்கும் என பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- கர்நாடகாவில் இரண்டு மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இரண்டு நாள் பயணமாக கர்நாடக மாநிலம் பெல்லாரிக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சந்தூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசினார்.
- அப்போது அவர், கர்நாடகாவில் தேர்தல் நெருங்குவதாகவும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எடியூரப்பா மீது நம்பிக்கை வைத்து பாஜகவிற்கு வாக்களியுங்கள் என கூறியுள்ளார்.
- கர்நாடகாவில் ஊழலற்ற ஆட்சியை பாஜக தரும் என அமித்ஷா உறுதியளித்தார்.
- எடியூரப்பா ஏற்கனவே நேரடி அரசியலில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ள நிலையில் அவரது பெயரை மேடையில் பயன்படுத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கர்நாடக முதல்வர் வசபராஜ் பொம்மையின் பெயரை கூறாமல் தவிர்த்து விட்டார்.
- ஏற்கனவே பசவராஜ் பொம்மை அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சியினர் முன் வைத்து வருகின்றனர்.
- இந்த சூழலில் உள்துறை அமித் ஷாவும் பொதுக்கூட்ட மேடையில் பேசிய போது முதல்வரின் பெயரை தவிர்த்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Next Story