உடும்பு ரத்தம் அமோக விற்பனை- "உரிய நடவடிக்கை வேண்டும்" - சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

x

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் உடும்பு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

உடும்பு ரத்தத்தை குடித்தல் உடல் வலிமை, ஆண்மை அதிகரிப்பு, சர்க்கரை நோய் உள்ளிட்ட பிரச்சினைகள் தீரும் என்ற மூட நம்பிக்கையால் விற்பனை சூடுபிடித்துள்ளது.

அழிந்துவரும் உயிரினம் மட்டுமல்லாது, அரியவகை உயிரினமான உடும்பை வேட்டையாட தடை உள்ள நிலையில், சிலர் வியாபார நோக்கில் விற்பனை செய்து வருகிறனர்.

எனவே, வனத்துறையினர் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்