“அனுமதியின்றி பேனர் வைப்பு“ - பாஜக நகரத்தலைவர் மீது பாய்ந்த வழக்கு
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக பாஜக நகரத் தலைவர் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமித்ஷா வேலூர் வருகையின் போது, குடியாத்தம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, மாநகராட்சி ஊழியர்கள் அதனை அகற்றினர். இது குறித்து குடியாத்தம் போலீசார் நகரத்தலைவர் மற்றும் 3 பெண்கள் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் 20 க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்...
Next Story