முடிவுக்கு வந்த ரூ.2000 நோட்டு... டெபாசிட் செய்யலாமா? மாற்றலாமா? - எது சிறந்தது? - முழு விளக்கம்
புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுகின்றன - ரிசர்வ் வங்கி
ரூ. 2000 நோட்டுகள் தொடர்ந்து சட்டப்படி செல்லும் - அதை பயன்படுத்த தடை இல்லை
உங்களிடம் இருக்கும் 2000-ரூபாய் நோட்டுகளை வங்கி கணக்கில் டெபாசிட் செய்யலாம், அல்லது 500-ரூபாய் நோட்டாக மாற்றிக்கொள்ளலாம்
நோட்டுகளை மாற்ற / டெபாசிட் செய்ய மே 23 முதல் செப்டம்பர் 30 வரை அவகாசம்
நாள் ஒன்றுக்கு 10 இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மட்டுமே (அதாவது, ரூ. 20,000 மட்டும்) வங்கியில் மாற்றிக்கொள்ள முடியும்
நேரடியாக வங்கி கணக்கில் டெபாசிட் செய்தால், எந்த உச்சவரம்பும் கிடையாது - ரூ.20,000-க்கு மேலும் டெபாசிட் செய்யலாம்
இனிமேல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை யாருக்கும் வழங்க கூடாது - வங்கிகளுக்கு உத்தரவு
2016 நவம்பரில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, ரூ.2000 நோட்டுகள் அறிமுகம்
2018-19 ஆம் ஆண்டே, 2000-ரூபாய் நோட்டு அச்சடிக்கும் பணி நிறுத்தம் - ரிசர்வ் வங்கி
2018-ல், புழக்கத்தில் இருந்த பணத்தில் 37.3%, இரண்டாயிரம் ரூபாய் நோட்டாக இருந்தது. தற்போது அது 10.8%-ஆக குறைந்துள்ளது
தற்போது புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு - ரூ. 3.62 லட்சம் கோடி
மார்ச் 2022 நிலவரப்படி, இந்தியாவில் புழங்கும் பணத்தில் 73 சதவிகிதம், 500 ரூபாய் நோட்டுகளாக உள்ளது
புழங்கும் மொத்த நோட்டுகளில், 2-ஆயிரம் நோட்டின் எண்ணிக்கை:
2020 - 2.4%
2021 - 2%
2022 - 1.6%
இதே போன்ற நோட்டுகளை திரும்ப பெறும் நடவடிக்கை, இதற்கு முன் ஜனவரி 2014-ல் எடுக்கப்படுள்ளது
2005-ஆம் ஆண்டுக்கு முன் அச்சடிக்கப்பட்ட அனைத்து நோட்டுகளையும், புழக்கத்திலிருந்து நீக்குவதாக, ஜனவரி 2014-ல் ரிசர்வ் வங்கி அறிவித்தது