வங்கதேச பிரதமர் பதவி விலக வலியுறுத்தி பேரணி

x

வங்கதேச எதிர்க்கட்சி, அந்நாட்டு ஆளும் அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் பேரணி நடத்தியது. அதிகரித்து வரும் எரிபொருள் விலை, விலைவாசி உயர்வு உள்ளிட்டவைகளை எதிர்த்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. விரைவில் தேர்தல் நடத்த வலியுறுத்தி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாதக் கட்சி தலைமையில் டாக்காவில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்