ஆசிரியர் கண்டித்ததால் விபரீதம் -14-வது மாடியில் இருந்து குதித்த மாணவன்...நெஞ்சை பதற வைக்கும் வீடியோ

x

பெங்களூருவில் தேர்வில் காப்பி அடித்ததை ஆசிரியர் கண்டித்ததால் பத்தாம் வகுப்பு மாணவன் 14வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு கே.கே நகரில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன், பயிற்சி தேர்வின்போது காப்பி அடித்ததாக கூறப்படுகிறது. இதை ஆசிரியர் கண்டித்து, மாணவனை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்ததாக கூறப்படுகிறது. பள்ளியில் இருந்து வெளியேறிய மாணவன், அருகில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பின்14 ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து மாணவன் தற்கொலை செய்து கொண்டார். மாணவனின் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகமே காரணம் என்று அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தேர்வில் காப்பி அடித்ததை கண்டித்தது உண்மை என்றும், பெற்றோரை அழைத்து வரும்படி கூறியதாகவும், அதற்குள் மாணவன், தற்கொலை முடிவை எடுத்துவிட்டதாக பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர். நெஞ்சை பதற வைக்கும் தற்கொலை வீடியோ வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்