திடீரென கொட்டிய கோடை மழை.. வாகனங்கள் மூழ்கியதால் அதிர்ச்சி - மாநகரமே மூழ்கிய பரபரப்பு காட்சிகள்
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையால், சாலைகளில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கி நின்றதால் மக்கள் அவதிக்குள்ளாகினர்
- பெங்களூர் நகர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்து வந்தது.
- இந்த நிலையில் நேற்று இரவு பெங்களூரு புறநகர் பகுதிகளான தேவனஹால்லி, மகதேவபுரா, ஒயிட்ஃபீல்டு உள்ளிட்ட பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
- இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிகுள்ளாகினர். மேலும், மழை நின்ற பின்னரும், பல்வேறு இடங்களில் வெள்ள நீர் வடியாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
- கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் பெய்த மழையின் போது, பெங்களூரின் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நகரவாசிகளை திக்கு முக்காட செய்தது குறிப்பிடத்தக்கது.
Next Story