அண்டர்கிரவுண்டில் இருந்து பரவிய கேஸ்.. வெடித்து சிதறிய வீடு.. சமைத்து கொண்டிருந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி - ஷாக் காட்சிகள்

x
  • பெங்களூருவில் எச்எஸ்ஆர் லே அவுட், 7 - வது செக்டரில் பெங்களூரு குடிநீர் வாரியத்தின் சீரமைப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது.
  • அப்போது எதிர்பாராத விதமாக நிலத்தடியில் புதைக்கப்பட்டிருந்த கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய் சேதமடைந்துள்ளது.
  • இதை குடிநீர் வாரிய அதிகாரிகள் கவனிக்காமல் அப்படியே விட்டதாக கூறப்படுகிறது.
  • இதனால் எரிவாயு கசிந்து, அருகிலுள்ள வீட்டின் சமையலறைக்குள் பரவியதால் வெடி விபத்து ஏற்பட்டது.
  • இதில் சமையல் செய்து கொண்டிருந்த பெண் உள்ளிட்ட இருவர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் எரிவாயு கசிவை சரி செய்தனர்.
  • எரிவாயு குழாய் கசிவால் ஏற்பட்ட விபத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
  • இச்சம்பவம் தொடர்பாக எஸ் எஸ் ஆர் லேஅவுட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்