காற்றாடி விட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவனுக்கு நடந்த விபரீதம் ..
பெங்களூருவில் காற்றாடி நூல் மின்கம்பியில் உரசியதில் 11 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு ஆர்.டி.நகர் பகுதியை சேர்ந்தவர் 11 வயது சிறுவன் அபுபக்கர். இவர் வீட்டின் அருகே உள்ள பூங்காவில் காற்றாடி விட்டு விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, காற்றாடியின் நூல் மேலே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின்கம்பியின் மீது உரசியதில், நூலினை பிடித்து கொண்டிருந்த அபுபக்கர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story