நீலகிரியில் சினிமா படப்பிடிப்பிற்கு தடை நீக்கம்
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் நிறைவடைந்ததை தொடர்ந்து தாவரவியல் பூங்கா உள்பட 7 முக்கிய சுற்றுலா தலங்களில் சினிமா படப்பிடிப்பிற்க்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. கோடை சீசனை முன்னிட்டு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காகவும், சுற்றுலா தளங்களில் கண்காட்சி பணிகள் நடைபெற்றதாலும் தோட்டகலை துறைக்கு சொந்தமான 7 முக்கிய சுற்றுலா தலங்களில் ஏப்ரல் முதல் ஜீன் மாதம் இறுதி வரை 3 மாதங்களுக்கு சினிமா படப்பிடிப்பு நடத்த தோட்டகலை துறை தடைவிதித்து இருந்தது. கோடை சீசன் நிறைவடைந்ததால் படப்பிடிப்பிற்கான தடை நீக்கப்பட்டுள்ளது. தோட்டகலை துறைக்கு சொந்தமான பூங்காக்களில் படப்பிடிப்பிற்க்கு அனுமதி தேவைப்படுபவர்கள் தோட்டகலை அலுவலகத்தை அனுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story