படகு சவாரிக்கு தடை - கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு | Munnar
மூணாறு ஆனையிறங்கல் படகு சவாரிக்கு கேரள உயர்நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். கேரளா மாநிலம் மூணாறு ஆனையிறங்கல் பகுதியிலுள்ள நீர்த்தேக்கத்தில், 2015 ஆம் ஆண்டு முதல் படகு சவாரி நடைபெற்று வந்தது. தேயிலை தோட்டங்கள் வழியாக சவாரி நடைபெற்றதால், சுற்றுலா பயணிகளிடம் இந்த படகு சவாரி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்தநிலையில் ஆனையிறங்கல் பகுதி காட்டு யானைகளின் நடமாட்டம் மிகுந்த பகுதி என்பதாலும், உரிய கட்டுப்பாடுகள் இல்லாமல் நடைபெறும் படகு சவாரியால் நீர்நிலை மாசுபடுகிறது என்பதாலும், படகு சவாரிக்கு தடை விதிக்க வேண்டுமென கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், படகு சவாரிக்கு தற்காலிக தடை விதித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
Next Story