குளியல் மையங்களில் ஆப்கான் பெண்களுக்குத் தடை - தலிபான் அரசின் அதிரடி உத்தரவு
பொது இடங்களில் குளிக்க ஆப்கான் பெண்களுக்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனர்...
ஆப்கான் தலிபான் வசம் வந்த பிறகு பெண்களுக்கு தொடர்ந்து பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
கல்வி நிலையங்களில் கட்டுப்பாடு, பொழுதுபோக்கு பூங்காக்கள், உடற்பயிற்சிக் கூடங்களுக்கு செல்லத் தடை என்று தொடர்ச்சியாக பல்வேறு தடைகள் ஆப்கான் பெண்களுக்கு தலிபான் அரசால் விதிக்கப்பட்டு வருகின்றது.
"ஹம்மம்" என்றழைக்கப்படும் குளியல் மையம் இஸ்லாமிய நாடுகளில் புகழ்பெற்றது...
இந்நிலையில், அது போன்ற பொது குளியல் மையங்களிலும் ஆப்கான் பெண்களுக்கு தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது
Next Story