"இந்தியாவில் 2027-க்குள் டீசல் வாகனங்களுக்கு தடை" - மத்திய அரசுக்கு பரிந்துரை

x

நாட்டில் பசுமை எரிசக்தி ஆதாரங்களில் கவனம் செலுத்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை நிலவாயு அமைச்சகம் அமைத்திருந்த தருண் கபூர் எரிசக்தி ஆலோசனைக் குழு, தனது பரிந்துரைகளை சமர்பித்திருக்கிறது. அதில், 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் மாசடைந்த பெரு நகரங்களில் டீசலில் இயங்கும் 4 சக்கர வாகனங்களுக்கு 2027-க்குள் தடை விதிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. நகர போக்குவரத்தில் அடுத்த ஆண்டு முதல் மின்சார பேருந்துகளை இணைக்க வேண்டும் எனவும் நீண்ட தொலைவு பேருந்துகளும் மின்சாரம் அல்லது எரிவாயுவில் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், 3 ஆண்டுகளுக்குள் ரெயில்வேயை 100 % மின்சார மையமாக்க வேண்டும் எனவும் தருண் கபூர் கமிட்டி பரிந்துரை செய்திருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்