பேக்கரியில் கெட்டு போன இனிப்புகள் - ஆட்டோ ஓட்டுநர்கள் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

x

திருவண்ணாமலை அருகே பேக்கரியில் கெட்டு போன பலகாரங்கள் வழங்கப்படுவதாக கூறி ஆட்டோ ஓட்டுநர்கள் வீடியோ வெளியிட்டு புகாரளித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தேரடி பகுதியில் செயல்பட்டு வரும் பேக்கரி ஒன்றில் ஆட்டோ ஓட்டுநர்கள் பலகாரங்கள் வாங்கி சென்றதாகவும், அதை உட்கொண்ட அவர்களின் குழந்தைகளுக்கு உடல்நிலை கோளாறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த கடைக்கு சென்ற ஆட்டோ ஓட்டுநர்கள் பலாகாரங்களை சோதனை செய்த போது இனிப்புகளில் தூர்நாற்றம் வீசுவதாக கூறி வீடியோ வெளியிட்டு புகாரளித்தனர். இந்நிலையில், பேக்கரியின் மீதும், உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்