கள்ளக்குறிச்சியில் செல்போனுக்காக செவிலியர் எடுத்த விபரீத முடிவு
ஆசையாக கேட்ட செல்போனை வாங்கித் தர தாய் மறுத்ததால் ஏற்பட்ட விரக்தியில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் குதிரைச்சந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரின் மனைவி செல்வி. இவர்களின் 20 வயதான மகள் தமிழரசி, தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தார்.
தன் தாயிடம் தனக்கு செல்போன் வாங்கித் தருமாறு தமிழரசி கேட்டுள்ளார். அதற்கு செல்வி மறுத்ததோடு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் விரக்தியடைந்த தமிழரசி, பூச்சிக் கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரின் சடலத்தை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story