கடன் தொல்லையால் கணவன் மனைவி எடுத்த விபரீத முடிவு - சோகத்தில் மூழ்கிய செங்கல்பட்டு | Chengalpattu |
மகாலட்சுமி நகரை சேர்ந்த கருத்தோவியன் என்பவர், தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், வங்கி கடன், மகளிர் சுய உதவி கடன் பெற்று, திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படும் நிலையில், கருத்தோவியன் தூக்கிட்டும், அவரது மனைவி மஞ்சுளா அதிகப்படியான நீரிழிவு மாத்திரைகளை சாப்பிட்டும் தற்கொலை செய்து கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கூடுவாஞ்சேரி போலீசார், இருவரது உடல்களையும் கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story