சாலையோரத்தில் தொப்புள் கொடியுடன் கிடந்த குழந்தை...
கோவை மாவட்டம் அன்னூர் அருகே பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று, சாலையோரத்தில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாணம்பாளையம், பகுதியில் தூய்மை பணியாளர்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, குப்பை தொட்டிக்கு அருகே இருந்த கட்டைப் பையில் பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று தொப்புள் கொடி அகற்றாத நிலையில் இருந்துள்ளது. இதனையடுத்து, குழந்தையை மீட்ட தூய்மை பணியாளர்கள், தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story