ஒரே குளத்தில் அடுத்து அடுத்து ஐயப்ப பக்தர்கள் உயிரிழப்பு.. காரைக்குடி அருகே பரபரப்பு
காரைக்குடி அருகே குளத்தில் மூழ்கி ஐயப்ப பக்தர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே குன்றக்குடியில் அருள்மிகு சண்முகநாதன் ஆலயம் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள குளத்தில், ஐயப்ப பக்தர்கள் நீராடிச் செல்வது வழக்கம். இந்நிலையில், சதீஸ் குமார் என்ற 24 வயதான ஐயப்ப பக்தர், குளத்தில் குளிக்க இறங்கிய போது, நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதே போன்று, 15 நாள்களுக்கு முன்பு 25 வயது மதிக்கத்தக்க ஐயப்ப பக்தரும் குளத்தில் மூழ்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. விபத்து தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story