நடுரோட்டில் தீப்பற்றி வெடித்து சிதறிய ஆட்டோ - திடீரென குவிக்கப்பட்ட போலீஸ் - பரபரப்பு
கர்நாடக மாநிலம் மங்களூரு கங்கநாடியை அடுத்த கரோடி பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ திடீரென தீப்பற்றி வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் இருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநரும் பயணி ஒருவரும் காயமடைந்தனர். குண்டுவெடிப்பு என வதந்தி பரவியதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். அதே நேரத்தில், சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்று தீப்பிடித்ததாக தெரிவித்துள்ள காவல்துறை வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சிசிடிவியில் பதிவான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story